புதுக்கோட்டை செம்பியன் அரங்கில் நடைபெற்ற 'உலக தாய் மொழி தினம்'!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், உலக தாய் மொழி தினத்தை புதுக்கோட்டை செம்பியன் அரங்கில் நடத்தியது. விழாவிற்கு வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

நிகழ்வில் "அன்னைத் தமிழைப் போற்றுவோம்" என்ற தலைப்பில் 26 புதுக்கோட்டை கவிஞர்கள் தமிழின் பெருமையை கவிதையாக பாடினார்கள்.

மேலும் 'தமிழ் மாமணி' விருது பெற்ற கவிஞர் பீர்முகம்மதுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்ட்டது.

அடுத்து, புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி "எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! எங்கள் தமிழே" என்ற தலைப்பில் உலக தாய் மொழி தின சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் "தமிழுக்கு பிற மொழிக்கு இல்லாத பல சிறப்புகள் உண்டு. தமிழ் சுவையான மொழி, இனிமையான மொழி. தமிழின் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளும் உண்டு. ஒவ்வொரு பொருளுக்கும் சுவையும், இனிமையும் உண்டு. நான் இதை இந்திய மொழிகள் கருத்தரங்குகளில், தமிழ் மொழியை மற்றவர்கள் கவனிக்கிற போது பார்த்திருக்கிறேன். இந்தத் தாய் மொழி தினத்தில் தமிழைப் போற்ற உறுதி ஏற்போம் என்றார்.முன்னதாக தமிழ்ச்சங்க பொருளாளர் மு.கருப்பையா வரவேற் று பேசினார். நிறைவாக மகாத்மா மழலையர் பள்ளி தாளாளர் நன்றி கூறினார். விழா நிகழ்வை கவிஞர் மு. உதயகுமார் தொகுத்து வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!