கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி!!

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்:தமிழக மக்கள் ஏற்கனவே தங்கள் முடிவை எடுத்துவிட்டதாக கூறினார். இரண்டு அரசியல் இயக்கங்களே தொடர்ந்து தமிழகத்தை ஆள வேண்டுமா, அல்லது புதிதாக ஒருவர் தமிழகத்தை ஆள வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானித்து விட்டதாக தெரிவித்தார்.

அந்த வகையில், தமிழக அரசியலில் புதிதாக விஜய் வந்துள்ள நிலையில், அவரது வருகை பிற அரசியல் கட்சிகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தோல்வி பயத்தின் காரணமாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

மேலும், வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் தமிழக தேர்தல் எப்போது நடைபெறும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றும், தமிழகத்தை புதிதாக ஒருவர் ஆள வேண்டும் என்ற எண்ணமே மக்களிடையே மேலோங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெற்றி என்பது மக்களின் சக்தியால் கிடைப்பது என்றும், அந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறிய செங்கோட்டையன், 2026 ஆம் ஆண்டு விஜய் தான் தமிழகத்தின் முதல்வராக வருவார் என உறுதியாக தெரிவித்தார்.

அதே நேரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாலேயே இத்தகைய கருத்துகள் வெளிப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

 கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!