நத்தத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பிரசாரம்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரசார பேரணி நடந்தது. நத்தம் ஒன்றிய செயலர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். சாணார்பட்டி ஒன்றிய செயலர் வெள்ளைக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ராணி, மாவட்டகுழு உறுப்பினர்கள் பெருமாள், சின்னக்கருப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர்  சச்சிதானந்தம்  கலந்து கொண்டு இருசக்கர வாகன பிரசார பேரணியை தொடங்கி வைத்தார். நத்தம்

பேருந்து நிலையத்தில் தொடங்கிய பிரச்சார பேரணி கோபால்பட்டி, சாணார்பட்டி வழியாக சென்று திண்டுக்கல்லில் நிறைவு பெறுகிறது. இதில் முன்னாள் மாவட்டகுழு உறுப்பினர் ஸ்டாலின் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!