பண்ருட்டியில் நடைபெற்ற யாதவ சமுதாய ஆலோசனைக் கூட்டம்! தேசிய செயலாளர். பாஸ்கர் யாதவ் பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் யாதவ சமுதாய ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர். சுரேஷ் மாய கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர். பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய யாதவ மகா சபையின் தேசிய செயலாளர். பாஸ்கர் யாதவ் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினார்.

கூட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்பிசி)பட்டியலில் சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், யாதவ சமுதாயத்திற்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உரிய  அங்கீகாரமும்,  முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, யாதவ சமுதாயத்தை எம்பிசி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி  அடுத்த மாதம் திருக்கோவிலூரில்  மாநில மாநாடு நடத்துவது உள்ளீட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் யாதவ சமுதாய நிர்வாகிகள். கண்ணன்,  கீர்த்தி, சரவணன், சதிஷ், ராம்குமார்,  பாலாஜி, ஸ்ரீராம், தமிழ்,  சதிஷ், முருகன், மகளிரணி ​செல்வி யாதவ், ​கௌரி யாதவ்,​ நாராயணமூர்த்தி, அன்புமணி, ​யுவராஜ், நெய்வேலி விக்கி, கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!