காணொளியில் திறந்த புதிய பள்ளி கட்டடத்தில் விரிசல்!ஒன்றரை கோடி கட்டிடம் சேதம் – மாணவர்கள் அச்சம்!! ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மக்கள் கோபம்!!!
கடலூர் மாவட்டம், வேப்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்காக சுமார் ரூ.1.61 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவிற்கு பின்னர் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது.
தரம் இல்லாமல் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக