தேனி: கம்பம் புதிய பேருந்து நிலையமா? மது அருந்தும் இடமா? – பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிர்ச்சி! (வீடியோ காட்சி)!!
தேனி கம்பம் பகுதியில் புதிதாக கட்டி, இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் தற்போது மது அருந்தும் நபர்களின் கூடாரமாக மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புதுப்பிக்கப்பட்டு மிகக் குறுகிய காலமே ஆன நிலையில், பேருந்து நிலைய வளாகத்திற்குள் சிலர் திறந்தவெளியில் மது அருந்தி தங்குவது வழக்கமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தின் சுத்தம் மற்றும் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடனும், பாதுகாப்பு பற்றிய கவலையுடனும் பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், மது அருந்திய நிலையில் சிலர் அங்குள்ள பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். புதியதாக புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக