மரியாதை தராவிட்டால்... திருப்பி அடிப்போம் - மாணிக்கம் தாகூர்!!

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்!

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையிலான கூட்டத்தில் திமுக கூட்டணியில் கூடுதல் இடம், கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது.

மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம்

நாடாளுமன்றத்தில் யார் பலமாக சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது.

காங்கிரஸ்தான் என் உயிர்; மரியாதை, அன்புதான் கேட்கிறோம். காங்கிரஸை சாதாரணமாக நினைத்து பேசுகின்றனர்; மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்.

எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்._

நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான்.

 காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!