நம்பரை கிராமத்தில் ஸ்ரீ பச்சையம்மன் சமேத மன்னார்சாமி மஹா கும்பாபிஷேகம் விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா, திமிரி அடுத்த நம்பரை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோவில் அஷ்ட பந்தனம் மஹா கும்பாபிஷேகம் விழா 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நாட்டாமை ரங்கநாதன், கிருஷ்ணமூர்த்தி, சேட்டு ஆகியோர் தலைமையேற்று ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டனர். விழாவின்போது மங்கள வாத்தியம், இரண்டாம் கால யோக பூஜை, பிம்பநாடி சந்தனம், மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் ஊர் பொதுமக்கள், நாட்டாமைக்காரர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, பக்தி பரவசத்துடன் கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.
மேலும் நம்பரை நாட்டாமைதார் ரங்கநாதன் அவர்கள், திமிரி நகர செயலாளர் KBJ. தாமோதரன் அவர்களை வரவேற்று நன்றி தெரிவித்தார்.
இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பச்சையம்மன் அருள் பெற்று மகிழ்ந்தனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்ததையடுத்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக