தி.மு.க அரசின் சாதனைகளை மகளிர் நிர்வாகிகள் வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்ற முன்னெடுப்பின் மூலம் வீடுதோறும் சென்று எடுத்துரைக்க வேண்டும்!அமைச்சர்.ஆர். காந்தி பேச்சு!!
ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் சட்டசபை தொகுதி சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்னும் தலைப்பில் மகளிர் பிரச்சாரத்தின் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி தலைமை வகித்தார். நெமிலி ஒன்றிய திமுக செயலாளர்கள்.பெ. வடிவேலு, எஸ். ஜி. சி.பெருமாள், தமிழ்ச்செல்வன், பசுபதி, தமிழ்மணி, நகர செயலாளர்கள். ஜோதி, நாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். வினோத் காந்தி, அரக்கோணம் தொகுதி பார்வையாளர். சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை, காலை சிற்றுண்டி திட்டம், இலவச பஸ் பயணம், அன்புக்கரங்கள் திட்டம், தாயுமானவர் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிறப்பான முறையில் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக காலை உணவு திட்டத்தை அனைத்து மாநிலங்களும் தொடர்ந்து பாராட்டி வருகிறது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் எல்லாம் தமிழகத்தை முன்னுதாரணமாக கொண்டு திட்டங்களை பின்பற்றி வருகின்றது. வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்றுமுதல் கடுமையாக உழைக்க வேண்டும். குறிப்பாக பெண் நிர்வாகிகள் ஸ்டாலின் மகளிர் படை வீடுகள் தோறும் நேரில் சென்று தி.மு.க அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று அவர் பேசினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக