நெமிலி அருகே சயனபுரம் கிராமத்தில் திமுக அரசின் சாதனைகளை மகளிர் நிர்வாகிகள் வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்ற முன்னெடுப்பின் மூலம் வீடுதோறும் சென்று பரப்புரை!!


ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், 

மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 பூத்களிலும் சயனபுரம் ஊராட்சியில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் வீடு வீடாக கழக சாதனைகளை பரப்புரை செய்யப்பட்டது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு பரப்புரை செய்தனர். இதில் கிளை கழக செயலாளர் S.E.B.சேட்டு, G.தயாளன், J.வகிதா மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!