கோவை, கோல்டுவின்ஸ், ராமலட்சுமி மஹாலில் நடைபெற்ற தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர். கரூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மக்களிடம் கருத்து கேட்டு நிகழ்ச்சி!!
கோவை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டப்பேரவை தேர்தல் 2026ஐ முன்னிட்டு, மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர், கோவி. செழியன், முன்னாள் அமைச்சரும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, திமுக கழக அயலக அணி செயலாளர். எம்.எம்.அப்துல்லா, கழகச் செய்தி தொடர்புக் குழு செயலாளர். பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கழக மருத்துவ அணி செயலாளர் மருத்துவர். எழிலன் நாகநாதன், கழக சுற்றுச்சூழல் அணி செயலாளர். கார்த்திகேய சிவசேனாதிபதி, மகளிர் தொண்டரணி இணை செயலாளர். அ. தமிழரசி ரவிக்குமார், ஜி. சந்தானம் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர். சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்ட தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், இன்று, கோவை, கோல்டுவின்ஸ், ராமலட்சுமி மஹாலில் நடைபெற்ற நிகழ்வில், கரூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்..
இதில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா. கா. ராமச்சந்திரன் அவர்கள், கோவை வடக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு மற்றும் நீலகிரி மாவட்டச் செயலாளர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருக்க, வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பரிந்துரைகள் வழங்கினார்கள்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக