புதுக்கோட்டையின் புதிய வரவு சிங்கிங் ஸ்டுடியோ!!
புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆலங்குடி ரோட்டில் பேங்க் ஆப் இந்தியா மாடியில் புதிதாக ஏ.ஆர். பி .சிங்கிங் ஸ்டுடியோ நாளை 27ந் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்பட உள்ளது. ஒய்வு பெற்ற கல்வி துறை அதிகாரி பி.வி.இராஜேந்திரன் முன்னிலை வகிக்கிறார் உதயராகம் ஆர்க்கெஸ்ட்ரா நிறுவனர் .எம்.எஸ் ரவிச்சந்திரன் ஸ் ஸ்டுடியோவை ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கிறார். திருச்சி எம் எஸ்கே ஸ்டுடியோ நிறுவனர் சாந்தி கண்ணன் குத்து விளக்கு ஏற்றி சிறப்பு செய்கிறார் விழாவிற்கான பணிகளை ஏ.ஆர்.பி ஸ்டுடியோ நிர்வாக இயக்குனர் ஏ. அரவிந்த், திருச்சிசூப்பர் பவர் ஸ்டுடியோ கே. மகேஸ் கலியநாதன், கல்வி அதிகாரி பி.வி.இராஜேந்திரன் ஆகியோர் செய்துள்ளனர். திறப்பு விழா முடிந்தவுடன் இக்கால நடைமுறைப்பாடல்களை கிராமத்துப்பாடல், நாட்டுப்புற பாடல், தெம்மாங்கு பாடல்களை சின்னத்திரைப்பாடல், சினிமாத்துறைபாடல்களை பிரபல பாடகர்கள் அரவிந்த், பி.வி.ஆர் ஆகியோருடன் பிரபல பாடகிகள் இணைந்து பாடி விருந்து படைக்க உள்ளனர். அனைவரும் வருகை புரிந்து வாழ்த்துரை வழங்குமாறு நிர்வாகத்தினர் வேண்டுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக