மதுரையில் மின்னல் வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள்!!
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்தது வந்து வாகனங்கள் அனைத்தும் தத்தளித்து செல்லும். இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் தமுக்கம் முதல் அண்ணாசிலை வரை ரூ. 190.40 கோடி செலவில் சுமார் 2 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 80% மேல் பணிகள் முடிந்துள்ள நிலையில், பிப்ரவரி 2026-ல் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் இந்த பாலம், செல்லூர் பகுதியையும் இணைக்கும் வகையில் 61 தூண்களுடன் கட்டப்படுகிறது.
திட்ட மதிப்பீடு: ரூ. 190.40 கோடி.
நீளம்: 2100 மீட்டர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக