மதுரை காந்தி மியூசியத்தில் “ஈசனுடன் ஓர் இரவு” – மஹாசிவராத்திரி விழா! சத்குருவுடன் நேரலையில்!!...

மதுரை:       உலகெங்கிலும் கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி ஆன்மிக விழா, வரும் பிப்ரவரி 15, 2026 அன்று மதுரையில் உள்ள காந்தி மியூசியம் வளாகத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.

      “ஈசனுடன் ஓர் இரவு” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விழா, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

       இந்த ஆன்மிக இரவு விழா, உலகப்புகழ் பெற்ற ஆன்மிக குரு ஞானி சத்குரு அவர்களின் வழிகாட்டுதலுடன் நேரலையில் நடைபெற உள்ளது. தியானம், ஆன்மிக உரைகள், விழிப்புணர்வு நிகழ்வுகள், மகா மந்திர தீட்சை, சக்திவாய்ந்த தியானங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் இடம் பெறுகின்றன.

மேலும், ஆதியோகி சிவனின் கதை, மனித குலத்திற்கு முதன்முதலாக யோக அறிவியல் பரிமாறப்பட்ட வரலாறு உள்ளிட்ட ஆழமான ஆன்மிக கருத்துகளை சத்குரு அவர்களே நேரலையில் வழங்க உள்ளார். மன அமைதி, உள்ளுணர்வு மற்றும் சுயஅறிவை நோக்கி பயணிக்க விரும்பும் மக்களுக்கு இது ஒரு முக்கிய ஆன்மிக வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஈஷா ஃபவுண்டேஷன் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் இந்த நிகழ்வில், மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

         நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், கூடுதல் தகவல்களுக்கு 83000 59000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்: மதுரை காந்தி மியூசியம்

தேதி: பிப்ரவரி 15, 2026

நேரம்: மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடக்க இருக்கிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!