அரக்கோணத்தில் சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீரை.தடுத்து நிறுத்த வேண்டும் சமூக ஆர்வலர். பால்ராஜ் கோரிக்கை!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் பஸ் நிறுத்தம் அருகே ஆறாக ஓடும் கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலரும், குட் லைப் நல்வாழ்வு அறக்கட்டளை தலைவருமான டாக்டர் பால்ராஜ் அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் முன்னாள் நகர மன்ற தலைவர். கண்ணதாசன் குடியிருக்கும்
புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் கால்வாய் கழிவுநீர்
சாலையோரம் ஆறாக பல வருடமாக பாய்ந்து ஓடுவதாக என்னிடம் பொது மக்கள் புகார் அளித்துள்ளனர் மேலும் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் ஆகவே அரக்கோணம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பாய்ந்து ஓடும் கழிநீரை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறினார் அமைப்பாளர். ஸ்ரீதர் உடன் இருந்தார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக