குடியாத்தத்தில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!


வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் (08.02.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், சேகரன், பாஸ்கரன், பாரத் நவீன்குமார், யுவராஜ், பூபதிராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி பொறுப்பு குழு உறுப்பினர் டாக்டர். நவீன்பிரபு வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மாநில பேச்சாளர் துரை. முருகேசன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் . கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், சங்கர், ஜோதி கணேசன், விஜயகுமார், நித்தியானந்தம், தனசேகரன், வட்டார பொறுப்பாளர்கள் ஆரோன், பாபு, பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹமத், பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா, மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாநில RGPRS துணைத் தலைவர் ராஜசேகரன், மாநில சிறுபான்மையினர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் MD.ராகிப், மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் ஜலேந்திரன், மற்றும் பள்ளிகொண்டா பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர் பாஷா, இலியாஸ் பாஷா ‌நிர்வாகிகள் ரங்கநாதன், சத்தியமூர்த்தி, மனோகரன், ஸ்டாலின், ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் நன்றியுரை கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!