திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நியமனம்!!
விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த ஆதி.கா.நிர்மல்ராஜ் என்பவரை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக
நியமனம் செய்து அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இந்த புதிய பொறுப்புக்கு பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சர். பொன்முடி எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர். பொன்.கௌதம சிகாமணி ஆகியோருக்கு ஆதி.கா.நிர்மல்ராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் திமுக நிர்வாகிகள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக