நத்தம் அருகே சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை  6 காரணக்காரர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயில் புதிதாக கட்ட முயற்சி எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு பிரிவினர்  காரணக்காரர்களிடம் கணக்கு கேட்டு கோயிலை அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வலியுறுத்தி வந்தனர். மற்றொரு தரப்பினராக காரணக்காரர்கள் உள்ளிட்டோர் இருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுன்படி  அக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தக்காராக பாலசரவணன்  நியமிக்கப்பட்டு, செயல் அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அறநிலையத் துறையினர் கோயிலை கையகப்படுத்தச் சென்றனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலை நிர்வகித்து வருபவர்களுக்கு ஆதரவாக கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கோயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது  கோயிலை நிர்வகித்து வரும் காரணக்காரர்களிடம் கோயிலின் நகைகள் உள்ளிட்ட  கணக்குகள் பற்றி அறநிலையத்துறையினர் கேட்டனர். அப்போது நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன்.குணசேகரன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்திருந்த காரணக்காரர்களில் சிலர் காரணக்காரர்களில் ஒருவரிடம் தான் கணக்குகள்  உள்ளது. அவர் முக்கிய தேவைக்காக வெளியூர் சென்றுள்ளார். என்று அறநிலையத்துறையினரிடம் கூறியதைத் தொடர்ந்து வரும் 11-ஆம் தேதி அவருடன் நத்தத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் வந்து ஆஜராகுவதாக   அவர்கள் கூறி ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் காவல் ஆய்வாளர் பொன்.குணசேகரன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் காலை முதல் மதியம் வரை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!