சுருளி அருவி தற்போது வறண்ட வெறும் பாறையாக காட்சி!!
தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் மாவட்டத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருகின்றன. இந்த நிலையில் சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு வரும் நீர் வரத்து இல்லாததால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து குறைந்து அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக