பாஜக மற்றும் அதிமுக அதன் தோழமைக் கட்சிகள் ஐ ஜே கே கட்சி ..சோழப் பேரரசு கட்சி ஒன்றிணைந்து தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்!!
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பேருந்து நிலையம் அருகில் பாஜக ஆட்சியின் நலத்திட்டங்களை விரிவாக எடுத்துரைத்து ஆளும் திமுக அரசு என்னென்ன கொள்ளையடித்தது என்பதனையும் எடுத்துரைக்கும் விதமாக பாஜக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேஷ்பாஜக ஆவுடையார் கோவில் ஒன்றிய தலைவர் குமரன்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாகராஜ் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் பழனி குமார் அன்பரசு எஸ்எம்எஸ் கணேசன் மற்றும் சோழப் பேரரசு கட்சியின் ஒன்றிய தலைவர் A மாரிமுத்து.மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேஷ் பாஜக ஆட்சியில் தான் டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டுவரப்பட்டது .அதற்குத்தான் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் அனைத்து பெண்களும் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று அப்பொழுதே அறிவுறுத்தினார்அதை கொச்சைப்படுத்தும் விதமாக திமுகவினர் பேசி வருகின்றனர் ஆனால் திடீரென்றுஅனைத்து பெண்களுக்கும் ரூபாய் 5000 வங்கிக் கணக்கில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகள் உள்ள உறுப்பினர்களுக்கும் அந்த கட்சியில் உள்ள கொள்ளை அடிக்கும் கும்பலுக்கும் தான் ரூபாய் ஐயாயிரம்வரவு வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக