அறந்தாங்கி அருகே புதுக்குடி மீனவ கிராமத்தில் சிவராத்திரி விழாவையொட்டி பாய்மர படகு போட்டி, திரளான ரசிகர்கள் கண்டுகளிப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா புதுக்குடி மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு பாய்மரப்படகு போட்டி நடைபெறுவது வழக்கம். மாவட்ட அளவில் நடைபெற்ற படகு போட்டியில் வடக்கு மற்றும் தெற்கு புதுக்குடி, ஐயம்பட்டினம்,கிருஷ்ணாஜி உள்ளிட்ட மீனவ கிராமங்களை களை சேர்ந்த 10 பாய்மரப் படகுகள் போட்டியில் பங்கேற்றன.ஒரு படகிற்கு 6 வீரர்கள் வீதம் 60 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். ஒரு படகிற்கு ஒரு சொருகு பலகை, ஒரு கடல் பலகை, ஒரு பாய் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.மேலும் பந்தைய தூரத்தை கடக்க 12 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட் டிருந்தது.போட்டி தூரத்தை விரைந்து கடக்க வீரர்கள், காற்றின் வேகத்தை அனுசரித்து பாய்மரத்தைமேலும் கீழும் ஏற்றி இறக்கி முந்திக்கொண்டு செயல்பட்டது காண்போரை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.1 லட்சத்து 20ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. படகு போட்டியை ஏராளமான ரசிகர்கள் , பொதுமக்கள் கடற்கரையோரம் திரண்டிருந்து ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக