இராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு புறத்தொடர்பு பணியாளர் தேவை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பதவி முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாத ஊதியம் : ரூ.10,592/- (தொகுப்பூதியம்)
கல்வி தகுதி & அனுபவம் : 12th Passed from a recognized Board / Equivalent Board
Good Communication Skills.
Weightage for work experience candidate
வயது வரம்பு : 42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது
முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
4வது தளம், F-பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
இராணிப்பேட்டைமாவட்டம்.
தொலைபேசி : 04172-299347
பூர்த்தி செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனைத்துச் சான்றிதழ் நகல்களுடன் பத்திரிக்கைச் செய்தி வெளியாகிய 15 நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை https://ranipet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும். இது தொடர்பாக எந்தவொரு கடித போக்குவரத்தும் மேற்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக