மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலை மீண்டும் நிருவ மாநகராட்சியிடம் கோரிக்கை!!
மதுரையில் ஜெயில் காளியம்மன் கோயிலை மீண்டும் நிருவ மதுரை மாநகராட்சி முதல் பெண் ஆணையாளர் சித்ரா விஜயன் அவர்களிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
600 வருடங்கள் பழமை வாய்ந்த ஜெயில் காளியம்மன் கோயில் ஓதுக்கு புறத்தில் இருப்பதை மீட்டு மீண்டும் அதை இடத்தில் கோவிலை நிறுவ வேண்டும் என்று மதுரை மாநகராட்சி முதல் பெண் ஆணையாளர் சித்ரா விஜயன் அவர்களிடம் மனு அளித்தார்கள். மனு அளித்த பிறகு இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கலந்து கொண்டு பேட்டி அளித்தார்கள். இந்த பேட்டியின் போது வியாபாரிகள் குமார், ராஜா,ஜெய்குமார், மற்றும் பூசாரி சக்தி வேல் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக