பழனியில் இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் உள்பட இருவா் கைது!!
திண்டுக்கல்,பழனி லட்சுமிபுரம் பகுதியை சோ்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி கீதா(25)-ஐ கடந்த 3-ஆம் தேதி வீட்டின் முன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பழனி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து பழனி காவலர்கள் தீவிர விசாரணை கொண்டு கீதாவின் தாய் ஹெலன்ஷீபா (47), அவரது நண்பா் மணிகண்டன்(29) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில்
கீதாவின் தாய் ஹெலன் ஷீபாவுக்கும், மணிகண்டனுக்கும் தகாத உறவு இருந்துவந்த நிலையில், கீதாவின் சகோதரிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கீதா புகாா் அளித்ததன் பேரில் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்தப் புகாரை திரும்பப் பெற கீதாவை வற்புறுத்தினா் கீதா மறுத்ததால் இருவரும் அவரை கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக