பாடியில் தமிழக மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் !!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் தலைமை இடமாகக் கொண்டு தமிழக மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பாடி எஸ் பி ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் திண்டுக்கல்டாக்டர் காட்டு ராஜா தலைமை தாங்கி பேசினார் தென் சென்னை மாவட்ட செயலாளர் ராஜு வரவேற்று பேசினார் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசினார்கள் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் கட்சியின் மாநில தலைவர் அரக்கோணம் டி. புலியேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் கீழ்கண்ட ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவற்றை நிறைவேற்ற முன்வரும் கட்சிக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முழு ஆதரவளிப்பது என முடிவு செய்ப்பட்டது அதன் விவரம் வருமாறு.கல்லூரி அனைத்து பாட பிரிவுகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நிபந்தனை இல்லாமல் கல்வி கடன் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் முதலுதவி ஆம்புலன்ஸ் வண்டி சாலை நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்ல தனி வழி அமைத்து தர வேண்டும். தமிழக பள்ளிகளில் செயல்படும் ஆலோசனை குழு போல் அரசு மருத்துவமனைகளில் குழ அமைத்து மருத்துவமான தரத்தை உயர்த்த வேண்டும். தலித், அருந்ததியர் மற்றும் மலைவாழ் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் 1 முதல் 12 வகுப்பு வரை இலவச கல்வி வழங்க அரசு உத்தரவிட வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.வீட்டிற்கு ஒரு படித்த இளைஞர்களுக்கு அரசாங்க வேலை வழங்கு வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் சென்னை மாநகராட்சி பொறுப்பாளர். ராஜ ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக