கைலாஷ்–மானசரோவர் மற்றும் முக்திநாத் நேபாள் யாத்திரை!!


*லாப நோக்கமின்றி குறைந்த செலவில்* *ஆன்மீக பக்தர்களுக்கு அரிய சேவை “கைலாஷ்–மானசரோவர் யாத்திரை என்பது ஒரு சாதாரண பயணம் அல்ல; அது ஆன்மீகத் தூய்மை மற்றும் உள்ளார்ந்த அனுபவத்தை வழங்கும் புனித யாத்திரை. அந்த அனுபவத்தை பொருளாதார தடைகளின்றி அனைத்து பக்தர்களும் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்,” என யாத்திரை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆன்மீக பக்தர்களின் வாழ்நாள் கனவாகக் கருதப்படும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை, லாப நோக்கமின்றி, குறைந்த செலவில் மேற்கொள்ள வழிவகுக்கும் ஒரு சிறப்பு சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை  பயண வசதி, பாதுகாப்பு மற்றும் செலவுக் குறைப்பு ஆகிய அம்சங்களில் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. வணிக நோக்கம் இன்றி, முழுமையாக ஆன்மீக சேவை மனப்பான்மையுடன் இந்த யாத்திரை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தங்குமிடம், உணவு, போக்குவரத்து, வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக, முதியோர் மற்றும் முதல் முறையாக யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களும் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்மீக சேவையாக முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், ஆன்மீக யாத்திரைக்கு புதிய பாதையை உருவாக்கும் முயற்சியாகவும் பாராட்டப்படுகிறது.

கைலாஷ் மானசரோவர்-நேபாள் யாத்திரை (13 இரவு 14 பகல்.)தொடர்பு எண் 7904897209 ஜூன் 24 காத்மாண்டு அடைதல், ஜூன் 25 பசுபதிநாத், ஜல் நாராயணன் கோவில் மற்றும் லோக்கல் டெம்பிள் தரிசனம், ஜூன் 26 காத்மாண்டுவில் இருந்து கியோரங் அடைதல், ஜூன் 27 கியோரங் தங்குதல் உயரமான சூழ்நிலையில் நமது உடல் பழக ஒரு நாள் இங்கு ஓய்வு எடுப்போம். ஜூன் 28 கியோரங்கில் இருந்து சாகா சென்றடைதல், ஜூன் 29 சாகாவிலிருந்து மானசரோவர் அடைதல் முழு நிலவொளியில் மானசரோவரில் தங்குதல், ஜூன் 30 மானசரோவரில் நீராடிய பின் மதிய உணவிற்க்கு பிறகு தார்ச்சன் சென்றடைதல், கைலாயம் மலையின் தெற்கு முகமான அஷ்டபத் தரிசனம் செய்தல், ஜூலை 1 தார்ச்சன்லிருந்து எம் துவாரம் வழியாக நடைபயணம் செய்து திரியேபுக்  சென்றடைதல் பரிக்ரமாவின் முதல் நாள் பயணம், 14 கிலோமீட்டர் பயணம், ஜூலை 2 திரியோ புக்கில் இருந்தது ஜுதல்புக் சென்றடைதல் பரிக்கிரமா இரண்டாம் நாள், 22 கிலோமீட்டர் பயணம், ஜூலை 3 ஜுதல்புக்லிருந்து தார்ச்சன் வந்தடைதல், பரிக்கிரமா மூன்றாம் நாள் 8 கிலோமீட்டர் பயணம், காலை 10 மணிக்குள்   நிறைவடையும். மீண்டும் சாகா பயணம் அடைந்து தங்குதல், ஜூலை 4 சாகாவில் இருந்து கியோரங் சென்றடைதல் இரவு தங்குதல், ஜூலை 5 கியோரங்கில் இருந்து காத்மாண்டு பயணம், ஜூலை 6 காத்மாண்டு நோக்கி பயணம், ஜூலை 7 காத்மாண்டுவில் ஒருநாள் நம்முடைய சொந்த செலவில் தங்குதல், ஜூலை 8 மதுரை நோக்கி விமான மூலம் பயணப்படுதல் யாத்திரை கட்டணம் நபர் ஒருவருக்கு 2,25000 முன் பணம் 45,000 செலுத்த வேண்டும் மீதி தொகையை (நமக்கு பெர்மிட் கிடைத்தவுடன் இந்திய பணத்தை டாலராகவோ அல்லது யுவான் ஆகவோ மாற்றி நாம் எடுத்துச் செல்வோம்) 24ஆம் தேதி நேபாளத்தில் நேரடியாக செலுத்த வேண்டும். தவிர விமான கட்டணம் பயணியை சார்ந்தது  ஒவ்வொரு பயணியும் ₹50,000 ரூபாய் தங்கள் சொந்த செலவிற்கு எடுத்து வர வேண்டும். யாத்திரையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பாஸ்போர்ட் முதல் மற்றும் கடைசி பக்கம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ யாத்திரைக்காக எடுத்து அனுப்ப வேண்டும். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் மெடிக்கல் சர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும் இது நம்முடைய டூர் நிர்வாகிகள் நமக்காக ஏற்பாடு செய்வார்கள் இதற்கு கட்டணம் உண்டு கட்டண விவரம் பின்பு தெரிவிக்கிறோம். 

யாத்திரை கட்டணத்தில் அடங்குபவை யாத்திரைக்கான பெர்மிட் விசா, தங்குமிடம் மூன்று வேளை சைவ உணவு, பேருந்து வசதி கைலாய யாத்திரை முடித்த பிறகு முக்திநாத் யாத்திரை செல்ல விரும்புபவர்கள் மேலும் 5-6 நாட்கள் தங்க வேண்டும். யாத்திரை கட்டணம் நபர் ஒருவருக்கு 20,000 செல்லும் இடங்கள் குப்தேஸ்வர் மகாதேவ் கோவில், சேவா லேக், வராகி கோவில், மற்றும் முக்கியமான கோவில்கள். முக்திநாத் கோவில், மனக்காமனா கோவில், காத்மாண்டுவில் நேரம் இருக்கும் பட்சத்தில் சில முக்கியமான கோவில்கள் பார்க்கலாம். யாத்திரையில் பங்கேற்பவர்கள் அனைவரும் டிராவல் இன்ஸ்யூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும். வட இந்தியாவில் உள்ள அனைத்து யாத்திரைகளும் காசி, அலகாபாத்,கயா,புத்தகமா, அயோத்தி யாத்திரை கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி யமுனோத்திரி யாத்திரை ஆதி கைலாஷ் மற்றும் ஓம் பர்வதம் பாபாஜி குகை,நீம்கரோலி பாபா ஆசிரமம் யாத்திரை உள்பட அனைத்து இடங்களுக்கும் யாத்திரை செல்ல சிறப்பான முறையில் செய்து கொடுக்கப்படும் மேலும் விரிவான தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். 7904897209, srisainath18@gmail.com

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!