தேனி:போதைப்பொருள் தடுப்பு மற்றும் பிற வழக்குகளின் எதிரிகள் பரிவர்த்தனை குறித்த காவல் துறை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!!
தமிழ்நாடு - கேரளா மாநிலங்கள் மற்றும் தேனி-இடுக்கி மாவட்டங்களுக்கிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் பிற வழக்குகளின் எதிரிகள் பரிவர்த்தனை குறித்த காவல் துறை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.
காவல் துறை துணைத்தலைவர் டாக்டர்.P.சாமிநாதன், இ.கா.ப., திண்டுக்கல் சரகம் அவர்கள் தலைமையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டா.B.சினேஹப்ரியா, இ.கா.ப அவர்கள், கேரளா மாநிலம், இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். K.M.சாபுமேத்யூ, இ.கா.ப., அவர்கள், கேரளா மாநிலம், இடுக்கி மாவட்ட தனிப்பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர்.T.A.யூனஸ், கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், பீர்மேடு உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்.விஷால் ஜான்சன், தேனி மாவட்டம், உத்தமபாளையம் உட்கோட்டம், காவல் துணைக்கண்காணிப்பாளர். R.பொன்னரசு, தேனி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்.C.சரவணன் மற்றும் கேரளா & தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை அலுவலர்கள் ஆகியோர்கள் பெரியார் புலிகள் பாதுகாப்பு சரணாலய துணை இயக்குநர் அலுவலகத்திலுள்ள அரங்க கூட்டத்தில் 06.02.2026ம் தேதி நடைபெற்ற மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வருகின்ற சட்டசபை தேர்தல்-2026 சம்மந்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பிற வழக்குகளில் எதிரிகள் பரிமாற்றம் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.
பின்னர் திண்டுக்கல் சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்கள் தேனி மாவட்டத்தின் மாநில எல்லையில் அமைந்துள்ள முந்தல் மதுவிலக்கு சோதனை சாவடி, போடிமெட்டு சோதனைச்சாவடி, கம்பம்மெட்டு சோதனைச்சாவடி மற்றும் குமுளி சோதனைச்சாவடி ஆகிய இடங்களை பார்வையிட்டும் பாதுகாப்பு அலுவல் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக