முத்துதேவன்பட்டியில் புதிய சமுதாய கட்டிடம் திறப்பு: ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!!
தேனி அருகே முத்துதேவன்பட்டி கிராமத்தில நவீன வசதிகளுடன் கூடிய புதிய சமுதாய கட்டிடத் திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஊர் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் மற்றும் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் தலைவர் மணிகண்டன் சமுதாய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார்.கீதா சசி - வீரபாண்டி பேரூராட்சி தலைவர்
சந்தானகிருஷ்ணன் - வக்கீல் சங்கத் தலைவர்,
பூமிநாதன் - மக்கள் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர்
கிங் விஜயகுமார் - திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆகியோரும்
விழாவின் ஒரு பகுதியாக, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊர் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்:
சக்திமுருகன் - தற்போதைய ஊர் தலைவர்
பால்ராஜ் - செயலாளர்
முருகன் - தலைவர்
பங்கேற்ற முக்கிய நபர்கள்
கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பல்துறையைச் சேர்ந்தவர்கள் விழாவில் பங்கேற்றனர்:
ஆசிரியர்கள்: கருத்த பாண்டியன், சீனிவாசன், ஈஸ்வரன், அனுசியா தேவி.சட்டத்துறை & கல்வி: வழக்கறிஞர் தங்கதுரை, பேராசிரியர் வினோபா.முன்னாள் ராணுவ வீரர்கள்: பிரபு, ராமமூர்த்தி.
சமூகப் பணியாளர்கள்: பாஸ்டர் கருப்பையா பவுல்ராஜ், மதீனா ஆம்புலன்ஸ் உரிமையாளர் ரகுமான்.
மேலும் ஊர் பெரியோர்களான முருகன், ரங்கநாதன், மாரியப்பன், முத்து முனியாண்டி, 'அட்டாக்' ஈஸ்வரன், நாகராஜன், ஆரோக்கியராஜ், கருப்பையா, ஜெயபாக்கியம், பசுமலைராஜா, மகாராஜன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக