உலக தாய்மொழி நாள் உறுதிமொழி!!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறைக் கொண்டுவர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகமெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம்

அனைத்து ஆவணங்களிலும் தமிழிலே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தமிழ்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன். என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!