திருமயத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரம்!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா கே.புதுப்பட்டி கடைவீதியில்  விடியா ஆட்சிக்கு உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பிலான விழிப்புணர்வு பிரசாரம்  அதிமுக சார்பில் நடந்தது. 

அரிமளம் தெற்கு ஒன்றிய செயலாளர். செல்வராஜ் சேர்வை தலைமை வகித்தார். அரிமளம்  ஒன்றிய முன்னாள் சேர்மன். எம்.எம்.கணேசன்,டிசிஎம்எஸ் துணைத்தலைவர். மணிடிசிஎம்எஸ்யோர் முன்னிலை வகித்தனர்.புதுப்பட்டி தொடக்கக்கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பழனி வரவேற்றார். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான அனைவருக்கும் இலவச பஸ் பயண சலுகை,மகளிர் உரிமைத்தொகை ரூ2 ஆயிரம் ஆக உயர்த்துதல்,மீண்டும் தாலிக்கு தங்கம், மகளிர் ஸ்கூட்டர் வாங்க மானியம் தருவோம். மின் கட்டண உயர்வு,சொத்துவரி உயர்வை  ரத்து செய்வோம் . விடியா அரசுக்கு உங்களுக்கு வரும் பில்லே ( bill) சாட்சி  என்ற துண்டுப்பிரசுரங்களை முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து வியாபாரிகள்,பொதுமக்களிடம் வழங்கினார். கூட்டத்தில் கும்மங்குடி முத்து, தலைமை நிலைய பேச்சாளர். குமார்.மேல்நிலை வயல் சண்முகம், இளைஞரணி செந்தில் குமார் ஆகியோர் பேசினர். தகவல் தொழில் நுட்ப அணி செயலர் சிவா நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!