தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆரம்பகட்டப் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட இந்தக் குழுவினர், இன்றும் நாளையும் சென்னையில் தங்கியிருந்து தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்த உள்ளனர். இன்று நடைபெறும் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிகின்றனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். தேர்தல் முன்னேற்பாடுகள் சரியான பாதையில் செல்வதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த முக்கிய வருகை, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!