நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள லிங்கவாடி ஊராட்சிக்குட்பட்ட எல்.மலையூர் கிராமத்தில், வருவாய்க் கூட்டமைப்பு திட்டம் 2024-2025 மற்றும் மாநில சிறப்பு உதவித் திட்டம் 2025-2026-ன் கீழ் ரூ.9.95 கோடி மதிப்பில் 5 கி.மீ. சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ளவற்றை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் கட்டப்படும் கலையரங்கம், கலைஞர் கனவு இல்லம் ரூ.3.10 லட்சம் ஆகியவற்றின் கட்டுமானத் தரத்தை சரிபார்த்தார். கண்மாய்க்கு வரத்துகால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வருகை பதிவு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழுதடைந்த மேற்கூரை சீரமைப்பு, நத்தம் பேரூராட்சி கூடுதல் அலுவலகம், அறிவுசார் மையம், காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் செயல்பாடுகள் குறித்த வசதிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், ரவீந்தரன், நத்தம் வட்டாட்சியர் பாண்டியராஜன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!