சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம் !!
ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மூலம் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்திலிருந்து தேனி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் பெ பாலமுருகன் அவர்கள் தலைமையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்றார்கள்
இதனால் தேனி ஒன்றியத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை பணிகள் நிறைவேற்றுவதில் சிரமமாக உள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக