தமிழக தேர்தல் எப்போது?
மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே 7, 10, 20, 23, ஜூன் 15 ஆகிய தேதிகளில் நிறைவடைகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்த 5 மாநில சட்டப்பேரவை தோ்தல், ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்பு. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மாா்ச் 2ஆவது வாரத்தில் வெளியாகும் எனத் தகவல். குறிப்பாக, மார்ச் 10-15க்குள் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக