என்.டி.ஏ கூட்டணியில் தடுமாற்றம்!!
பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர். அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியதும், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் போட்டியிட மாட்டேன் என்ற அறிவிப்பும், என்.டி.ஏ கூட்டணியின் ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தாக்கம்:
முக்கிய முகங்கள் தேர்தல் களத்தில் இல்லாதபோது, தொண்டர்களின் உற்சாகமும், நடுநிலை வாக்காளர்களின் நம்பிக்கையும் குறைய வாய்ப்பு உள்ளது. இது “பலவீன சிக்னலாக புரிந்துகொள்ளப்படுகிறது.
குழப்பம்:
தொகுதி உடன்பாடு தெளிவாகாததால், பல அதிமுக தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் களப்பணி வேகம் குறையலாம்.
அபாயம்!
அதிமுக–பாஜக, விஜய் தலைமையிலான தவெக, சீமான் கட்சி என எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்பதால், திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒருமுகப்படாமல் சிதறும் சூழல் உருவாகிறது.
திமுகக்கு சாதகம்:
எதிர்க்கட்சிகளில் ஒருங்கிணைப்பு குறைவு, முக்கிய தலைவர்கள் விலகல், மனோபாவ அரசியலில் திமுகக்கு சாதகமான பிம்பத்தை உருவாக்குகிறது.
மொத்த மதிப்பீடு:
தற்போதைய நிலவரத்தில் என்.டி.ஏவில் ஒருமித்தத் தாக்கம் குறைவதாகத் தோன்றுகிறது.
இது தொடர்ந்தால், தி.மு.க-விற்கு தேர்தல் களம் சாதகமாக மாறும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக