அரக்கோணம் டவுன்ஹாலில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் திட்டம் !!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அரசு மருத்துவமனை எதிரே  டவுன்ஹால் உள்ளது இந்த டவுன்ஹாலின் புதிய  நிர்வாகம் கடந்த வருடம் பொறுப்பேற்றது அந்த புதிய நிர்வாகம் சார்பில் வாரத் தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது அந்த திட்டத்தின் படி நிர்வாகிகளில் ஒருவர், செயற்குழ உறுப்பினர்களில் ஒருவர், அல்லது அங்கத்தினர்களில் ஒருவர் வாரம் சனிகிழமைகளில் பங்கேற்கும் அன்னதானம் வழங்கும் திட்டம் இது. ஆகவே இத்திட்டத்தின்படி இந்த வாரம் பிப்ரவரி 14ந் தேதி செயற்குழு உறுப்பினர்  வினோத்குமார் பங்களிப்பு உடன் அன்னதானம்  வழங்க ஏற்பாடு செய்யபட்டது இந்த அன்னதானம் நிகழ்ச்சிக்கு டவுன் ஹால் தலைவர். ஜி.கே.பாபுஜீ  தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார். பொது செயலாளர் டாக்டர். பன்னீர்செல்வம் அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளில் சமூக நல பொறுப்பாளர். முருகவேல் ஈடுபட்டு அனைவரையும் ஒருங்கிணைத்தார் இந்த வார அன்னதான திட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தலைவர். வி .எஸ்.ஆர். ரவிசந்திரன் முன்னாள் பொது செயலாளர். ரவி ஆகியோரும் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள். மேலும்  நிகழ்ச்சியில் டவுன்ஹால்  முன்னாள், இந்நாள் நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும், அங்கத்தினர்களும் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள். பொது மக்கள் தூய்மை பணியாளர்கள் என பலர் நீண்ட வரிசையில் நின்று அன்னதானம் பெற்றுச் சென்றனர் இறுதியில் டவுன்ஹால் மேலாளர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!