சாணார்பட்டி அருகே மருநூத்தில் மணல் லாரியை மறித்து த.வெ.க-வினர் சாலை மறியல்!!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மருநூத்தில் த.வெ.க திண்டுக்கல் தெற்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் ஆவிளிப்பட்டி, வீரசின்னம்பட்டி, மருநூத்து, வி.டி.படடி, திம்மணநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கு வந்த மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளைத் தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள், அரசு அனுமதியின்றி குளங்களில் மண் அள்ளி விற்பனை செய்வதாகக் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, மருநூத்து - அதிகாரிபட்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த சாணார்பட்டி காவல் ஆய்வாளர். பிரபாகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, கலைந்து சென்றனர்.

இதனால் அச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சந்தோஷ், முருகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!