தொடர் காத்திருப்பு போராட்டம்!!
ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டம்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 2018 முதல் முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளருக்கு மாத ஓய்வூதியம் பகுதிநேர பணியாளர்களுக்கு வழங்குவது போன்று இன்னும் வழங்குவதனால் தொடர் காத்திருப்புப் போராட்டம்.முறையான கால முறை ஊதியம் பெறும் ஊராட்சி செயலாளர்கள் தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி சென்னையில் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதில் தேனி மாவட்டம் ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் பெ பாலமுருகன் அவர்களுடன் தேனி மாவட்டத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக