மாநில அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பெற்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். சேலம் மாவட்ட செஸ் அசோசியேசன் தங்களது ஐம்பதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக மாநில அளவிலான செஸ் போட்டியினை சேலத்தில் நடத்தியது. இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்,மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் க. லோகித், 15 வயதினருக்கான பிரிவில் 7 சுற்றுகள் விளையாடி 4.5 புள்ளிகள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மாநில அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனை பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக