இலுப்பூர் மதர் தெரசா வேளாண்மை கல்லூரியில் காலிபிளவர் முட்டை கோஸ் சாகுபடி!!


இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள மதர் தெரசா வேளாண்மை கல்லூரியில் காலிபிளவர் மற்றும் முட்டைகோஸ் சாகுபடி செய்த மாணவ மாணவிகள் அதனை விற்பனைப்படுத்தி அசத்தினர் முதல் விற்பனையை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் இரா. சின்னத்தம்பி தாளாளர் R.C. உதயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய முட்டைகோஸ் மற்றும் காலிஃப்ளவர் காய்களை நவீன முறையில் பயிரிட்ட மாணவ மாணவிகளுக்கு நிறுவனத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். பி . ராமநாதன் அனைவரையும் வரவேற்றார். மாணவ மாணவியருக்கு வழிகாட்டியாக இருந்த உதவி பேராசிரியர் தோட்டக்கலை துறை முனைவர் கலைச்செல்வன் மற்றும் உதவி பேராசிரியர் செல்வி கீர்த்தனா அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இம்முயற்சி நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வறண்ட பகுதிகளிலும் குளிர் பிரதேச காய்கறிகளை பயிரிட முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  நிகழ்வில் கல்வி நிறுவனங்களின் பதிவாளர் மு. தினேஷ்குமார் இயக்குனர் திருமா. பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!