கேரள மாநில நீதித்துறை வரலாற்றில் புதிய மைல்கல்லாக, முதல்முறையாகப் பார்வைத்திறன் குறைபாடுடைய பெண் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்!!
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹன்னா ஆலிஸ் சைமன் என்ற 25 வயது இளம்பெண், அண்மையில் நடந்த கேரள சிவில் நீதிபதி (ஜூனியர் டிவிஷன்) தேர்வில தேர்ச்சி பெற்று இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். பிறவியிலேயே பார்வைத்திறன் இல்லாத நிலையிலும், தனது விடாமுயற்சியால் சட்டப் படிப்பை முடித்து இப்போது நீதியரசர் நாற்காலியில் அமரவிருக்கும் இவருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக