பண்ருட்டியில் அவந்திஸ் கிட்ஸ் பிளாசா குழந்தைகள் விளையாட்டரங்கம் திறப்பு விழா!!
பண்ருட்டியில் லிங்க் ரோடு லட்சுமிரங்கா கார்டனில் அவந்திஸ் கிட்ஸ் பிளாசா ஆத்மிஸ் பார்ட்டி ஹால் திறப்பு விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் விளையாடுவதற்காகவே பிரத்யேகமாக தொலைநோக்கு பார்வையில் துவங்கப்பட்ட ஒரு விளையாட்டு அரங்கம் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான, பாதுகாப்பான ஒரு உள் விளையாட்டரங்கம். இதில் 1 வயது முதல் 12 வயது குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்விழாவிற்கு வருகை புரிந்தவர்களை கிட்ஸ் நிறுவனர், பண்ருட்டி மனவளக்கலை மன்ற அறக் கட்டளை டாக்டர் அபிராமி விஜயரங்கன், உரிமையாளர் விஜயரங்கன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர். அவந்திஸ் கிட்ஸ் பிளாசாவை டாக்டர் ராதாகிருஷ்ணன் விஜய லட்சுமி துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர்கள் பிரிய தர்ஷினி ராமகிருஷ்ணன், ஜெயஸ்ரீ வர்தினி மனோஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், பண்ருட்டி நகர மன்ற தலைவர் இராஜேந்திரன், முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம், துணை தலைவர் சிவா, அதிமுக நகர செயலாளர் மோகன், வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகம், எஸ்.வி.ஜூவல்லர்ஸ் அருள், ஐஸ்வர்யா ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக