குடியாத்தத்தில். விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை மற்றும் பிற கிராமங்களில் உள்ள சிறு குரு மற்றும் பெரு விவசாயிகளுக்கு 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பையூர். கிருஷ்ணகிரி. 

நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரகத் தோட்டக்கலை பணி அனுபவம் மற்றும் தொழில்துறை இணைப்பின் கீழ் விவசாயிகளிடம் சென்று. தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். 

தென்னை மரம் ஏறும் கருவி குறித்து செயல்முறை விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காட்டப்பட்டது 

தென்னை மரம் ஏறுவது. பெரும்பாலும் அபாயகரமானதும் அதிக உடல் உழைப்பு தேவைப்படும். பணியாகும். இதனை . எளிதாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தென்னை மரம் ஏறும் கருவி குறைந்த. நேரத்தில் பாதுகாப்பாக மரம் ஏற . உதவுகிறது 

குறிப்பாக வயதான விவசாயிகளுக்கும் பெண் விவசாயிகளுக்கும் தொழிலாளர்கள் கிடைக்காத சூழ்நிலையிலும் இந்த கருவி மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என மாணவர்கள் விளக்கினார்கள்

நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கருவிய பயன்படுத்தும் முறை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை.

நடவடிக்கைகள் ஆகியவற்றை தெளிவாக எடுத்துரைத்தனர் பின்னர் . கருவியை பயன்படுத்தி மரம் ஏறும் முறையை நேரடியாக செய்தி காட்டினார்கள். 

விவசாயிகள் இந்த தொழில்நுட்பத்தை பாராட்டி. இது தங்களின் வேலையை எளிதாக்கும் என்றும் செலவை குறைக்கும் என்றும் தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் சமூக பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தத்துடன் நவீன வேளாண்மை தொழில்நுட்பத்தைகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக அமைந்தது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!