விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் பயிற்சி கூட்டம்!!
விழுப்புரம் மாவட்டம்,கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் பயிற்சி கூட்டம், விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும்,
எம்.எல்.ஏ.வுமான லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மகளிர் அணியினருக்கு நாள்தோறும் பொது மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் எவ்வாறு ஈடுபட வேண்டும் தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்காளர்களை மகளிர் அணியினர் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து பேசினார்கள்.கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பராஜ், அவைத்தலைவர் வழக்கறிஞர் கண்ணப்பன், நகர மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவர் சச்சிதானந்தம், நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், வளவனூர் பேரூர் கழக செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுவை சுரேஷ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக