கடலூரில் உள்ள நத்தவெளி ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தின் எதிரில் உள்ள வேப்பமரத்தில் பால் வடிந்தது! பொதுமக்கள் வழிபாடு!!
கடலூர் மாவட்டம், கடலூரில் உள்ள நத்தவெளி ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தின் எதிரில் உள்ள வேப்பமரத்தில் பால் அருவி போல் ஊற்றெடுத்து வடிந்து கொண்டிருக்கிறது. இதை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கூட்டம் காண திரளாக வந்து கற்பூர தீபம் ஏற்றி வணங்கிச் செல்கின்றனர். இதனால் இந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் வேப்பமரத்தில் இருந்து வடியும் பாலை காண ஆர்வத்துடன் வந்துகொண்டிருக்கிறார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக