தூய்மை பணியாளருக்கு காலை உணவு திட்டம்!அரக்கோணம் நகராட்சி துவக்கம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக அரசின் ஆணைக்கிணங்க அரக்கோணம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கும் திட்டம் நகரமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யபட்டு நகர மன்ற கூட்டத்தில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
அத்திட்டத்தின்படி காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நேற்று அன்னபூர்ணா விடுதியில் நடைபெற்றது. விழாவிற்கு நகர மன்ற தலைவர். லட்சுமி பாரி தலைமை தாங்கினார். ஆணையாளர். ஆனந்தன் வரவேற்றார் துணைத் தலைவர். கலாவதி அன்பு லாரன்ஸ் முன்னிலை வசித்தார். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் மேலும் இத்திட்டத்தின் படி 329 பேர் தினமும் பயனடைவார்கள் மேலும் திட்டத்தின் படி ஏ டிவிஷன் பி டிவிஷன் மெயின் அலுவலகம் ரத்தம்சன் நகர் மற்றும் ஜூபிலி ரோடு மார்க்கெட் என ஐந்து இடங்களில் நிறைவேற்றப்படும் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது நிகழ்ச்சி நிறைவில் சுகாதார அலுவலர். வெயில்முத்து நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக