அரக்கோணத்தில் கலாம் அறக்கட்டளை ஏற்பாட்டு விழாவில் அரசு பள்ளி மாணவர்கள் டாக்டர் ஆக வேண்டும்! நினைவு பரிசு வழங்கிய எம்.எல்.ஏ வாழ்த்தி பேச்சு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் சட்டமன்ற தொகுதி மேல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குமினி பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எண்ணற்ற பிளஸ் டூ  மாணவ, மாணவியர்கள் முன்னாள் முதலமைச்சர். எடப்பாடியார் கொண்டு வந்த 7.5 இட ஒதுக்கீட்டின்படி டாக்டர்களாகும் வாய்ப்பு உருவாக்கபட்டது அனைவரும் அறிந்தது எனவே மாணவர்களை ஊக்குவிக்கும் கூட்டம் நடைபெற்றது 10 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அரக்கோணம் அப்துல் கலாம் டிரஸ்ட் தலைவர் டாக்டர்.  சுகந்தி வினோதினி ஏற்பாட்டு கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்றார். பள்ளி ​தலைமை ஆசிரியர். தியாகராஜன் தலைமை தாங்கினார்.  ​மருத்துவ படிப்பிற்கு தொடர்பு உடைய பாட வகுப்புகளில் பயிலும் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத ஆர்வத்துடன் முன்வந்துள்ளவர்களை வாழ்த்தும் கூட்டத்தில்   சிறப்பு அழைப்பாளராக  சட்டமன்ற உறுப்பினர் சுரவிகலந்து கொண்டு செத்தோஸ்கோப்களை பரிசாக வழங்கி  பேசினார் அவர் பேசிய போது இந்தப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர நான் முயற்சி மேற் கொண்ட வன் இதேபோன்று பல பள்ளிகளையும் தரம் உயர்த்திருக்கிறேன் ஏனெனில் ஒவ்வொரு மாணவர்களும் சிறந்தவர்களாக வர வேண்டும் அதிலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் கொண்டு வந்துள்ள 7.5% இட ஒதுக்கீட்டின் படி ஒவ்வொரு மாணவரும் டாக்டராக வேண்டும் என்கிற அவரது கனவை நிறைவேற்ற நீங்கள் எல்லோரும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இதுவரையில் அவரது ஆட்சி காலத்தில் 4 ஆயிரம் பேர் டாக்டர்களாக உருவாகியுள்ளர் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன் என பேசினார்.

கூட்டத்தில் அதிமுக எம் ஜி ஆர் மன்ற செயலாளர். சரவணன் பள்ளி  ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர் உதவி தலைமை ஆசிரியர். ஈஸ்வரன்  நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!