திமுக அரசை கண்டித்து நத்தத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெ.பேரவை மாநில இணைச்செயலர். ஆர்.வி.என். கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில்

கிராமப்புற மக்களுக்கான 125 நாள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டியும், அரசின் நிதி மேலாண்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் எழுப்பியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கைகளில் பதாகைகளை ஏந்தியவர்கள் திமுக அரசுக்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!