உப்புக்கோட்டை கடைவீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்!!
தேனி மாவட்டம், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். V.பாஸ்கரன் IPS அவர்களின் ஆலோசனைப்படியும், தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பரிந்துரையின் படியும் இன்று உப்புக்கோட்டை வணிகர் சங்கம் சார்பாக உப்புக்கோட்டை நகர் பகுதியில் கடை வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். V. பாஸ்கரன் IPS அவர்கள் திறந்துவைத்தார்.
இவ்விழாவில் தலைமை: மாவட்ட தலைவர். P. செல்வக்குமார், வரவேற்புரை :மாவட்ட செயலாளர். திருவரங்கப்பெருமாள் நன்றியுரை: மாவட்ட பொருளாளர். அருஞ்சுனை கண்ணன் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் உப்புக்கோட்டை நகர வணிகர் சங்க தலைவர். ராமகிருஷ்ணன் செயலாளர். கணேசன் பொருளாளர். சுரேஷ் மற்றும் உப்புக்கோட்டை நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் இன்னும் பல நகர்புற, கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கேட்டு கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக