நெமிலி அருகே பள்ளூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் பகுதிநேர நியாய விலைக் கடையை அமைச்சர்.ஆர். காந்தி திறந்து வைத்தார்!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளூர் பழைய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்களிடம் பள்ளூர் பழைய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து ஒன்றிய குழு தலைவர் அவர்கள் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பள்ளூர் பழைய ஆதிதிராவிடர் பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேற்று பள்ளூர் பழைய ஆதிதிராவிடர் குடியிருப்பில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், கூட்டுறவுத் துறையின் அதிகாரிகள், நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, ஊராட்சி மன்ற தலைவர். பிரதாப், ஒன்றிய கவுன்சிலர். சரஸ்வதி பார்த்திபன், சேட்டு, மோகன், வேலாயுதம், திருநாவுக்கரசு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக